உள்நாடுபிராந்தியம்
மீனவர்களுகு அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கு
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் இன்றையதினம் (15) நடாத்தப்பட்டது.
இவ் விழிப்புணர்வு கருத்தரங்கில் பேபாரப்பிட்டி பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மீனவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் திரு.கோகுல்ராஜ் அவர்கள் எதிர்காலங்களில் ஏற்படுகின்ற அனர்த்த அபாயங்களை குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து மீனவர்களிடையே கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.