பொலித்தீன் உற்பத்திகளின் விலை நூற்றுக்கு 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீழ்சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டொலர் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதன் காரணமாக பொலித்தீன் உற்பத்திகளின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் அனுர விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த மூன்று மாதங்களாக மூலப்பொருளை உரிய முறையில் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சுமார் 500 தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தொழிலை இழந்துள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீழ்சுழற்சியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.