crossorigin="anonymous">
உள்நாடுபொது

யாழ் விசேட பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் – மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று (20) திறந்து வைக்கப்பட்டது.

விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. சேதன பசளை உற்பத்தி மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்துகை மற்றும் நெல், தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழில்நுட்ப கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட இந்த விசேட பொருளாதார மத்தியநிலையத்திற்கு பதுளை பொருளாதார மத்திய நிலையம் மற்றும் யாழ் சந்தையிலிருந்து அத்தியாவசிய மரக்கறிகள் மற்றும் பழங்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, யாழ்.மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், பிரதேச செயலாளர்கள், துறைசார் உத்தியாகத்தர்கள் மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 7

Back to top button
error: