132 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்து
சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்திலிருந்து குவாங்சு மாகாணத்தை நோக்கி 132 பேருடன் சென்ற போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடக்கும் நிலையில், பயணிகள் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பு சொற்பமானதாகக் கருதப்படுகிறது.
2010-ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனாவில் நடந்துள்ள மிகப்பெரிய பயணிகள் விமான விபத்து என்பதால் சீன அதிபர் ஜி சின்பிங் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ரேடாரில் இருந்து விலகிய அந்த நொடி… – விபத்துக்குள்ளான விமானம் சீனாவின் தென்மேற்கு நகரான குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று (21 )மதியம் 1.11 மணியளவில் புறப்பட்டுள்ளது. விமானம் குவாங்சு மாகாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சரியாக 2.22 மணியளவில் விமானம் 3,225 அடி உயரத்தில் 376 நாட் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. ஆனால், அடுத்த நொடி ரேடார் கண்காணிப்பில் இருந்து விமானம் விலகியது என சீனாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.(இந்து)