அடையாளம் காணப்படாத காச நோயாளர்கள் பலர் சமூகத்தில் இருப்பதாக காச நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் சமூக சுகாதார விசேட வைத்தியர் திருமதி ஒனாலி ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
வருடத்தில் 14 ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுகின்றனர்.இதற்கு அமைவாக கடந்த வருடத்தில் 6,700 நோயாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் காரணமாக காச நோயாளர்களை அடையாளம் கண்டு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஒனாலி ராஜபக்க்ஷ குறிப்பிட்டார்.
மேலும் தெரிவிக்கையில்
“காச நோய் ஏற்பட்ட நோயாளர் என்ற அனர்த்தத்துடனான பலரை நாம் அடையாளம் கண்டுள்ளோம். சமூகத்தில் காச நோயாளராக அடையாளம் கண்ட நபரை அவசியம் பரிசோதனைக்கு உட்படுத்துவது முக்கியமானதாகும்.இவருடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளவர்களுக்கு இந்த நோய் ஏற்படக்கூடும்.
குறைந்த வயதைக் கொண்டவர்களில் பிள்ளைகள் மற்றும் வளர்ந்தோருக்கும் இடையில் இந்த நோய் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் அதிகம்.காச நோயை அடையாளம் காண்பதற்கு பரிசோதனைகள் உண்டு.
இவை தொடர்பான சேவைகள் அனைத்து மாவட்ட வைத்தியசாலைகளிலும் உண்டு. அனைத்து பரிசோதனைகளும் சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
எதிர்காலத்தில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலம் 2035 ஆம் ஆண்டில் காச நோயை நாட்டில் இருந்து இல்லாது ஒழிப்பதே நோக்கமாகும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.