crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊடகவியல் நட்புறவுத் திட்டத்திற்கு ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்

ஊழலுக்கு எதிரான செயற்படும் உலகளாவிய நிறுவனமான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனலின் உள்நாட்டு அமைப்பான ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது, இலங்கையில் புலனாய்வு ஊடகவியல், ஊடகக் கல்வி மற்றும் இணையவழி ஊடக அறிவினை இளம் ஊடகவியலாளர்கள் மத்தியில் மேம்படுத்தும் நோக்குடன் பிரதேச ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோருகின்றன

வட மாகாணம் (வவுனியா பிரதேச ஊடகவியலாளர்கள் விரும்பத்தக்கது), கிழக்கு மாகாணம் (கிண்ணியா மற்றும் மூதூர் பிரதேச ஊடகவியலாளர்கள் விருப்பத்தக்கது), தென் மாகாணம் (காலி மற்றும் மாத்தறை பிரதேச ஊடகவியலாளர்கள் விரும்பத்தக்கது), வடமேல் மாகாணம் (குளியாபிட்டிய பிரதேச ஊடகவியலாளர்கள் விரும்பத்தக்கது), மத்திய மாகாணம் (மஸ்கெலியா பிரதேச ஊடகவியலாளர்கள் விரும்பத்தக்கது) போன்ற பிரதேச ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோருகின்றன.

இத்திட்டமானது பொதுக் கொள்முதல், பொறுப்புக்கூறல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI), சொத்து அறிவிப்புகள்/ பிரகனடங்கள், சொத்து மீட்பு, இலஞ்சம், ஊழல், வரவு செலவுத் திட்ட பங்கேற்பு மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பிலான பயிற்சிப் பட்டறைகள் மற்றும் புலனாய்வு ஊடகவியல் சார்ந்த செய்தி அறிக்கையிடல்களை வெளியிடல்/ பிரசுரித்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியுள்ளது.

புலனாய்வு ஊடகவியல் மற்றும் ஊழல் விடயங்களுடன் தொடர்புடைய அறிக்கையிடலில் இளம் ஊடகவியாளர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் TISL நிறுவனமானது 2019 ஆம் ஆண்டு நட்புறவுத் திட்டமொன்றினை ஆரம்பித்தது. 2021 ஜனவரி மாதம் முதல் 2023 டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் வரவு செலவுத் திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய கண்காணிப்பு செயல்முறைகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் என்பவற்றினை வலுப்படுத்த Strengthening Accountability Networks Among Civil Society (SANCUS) எனும் திட்டத்தின் கீழ் ஆறு பிராந்திய ஊடகவியலாளர்களை TISL நிறுவனம் உள்வாங்கவுள்ளது.

செயற்றிட்ட காலப்பகுதியான 2022 ஏப்ரல் மாதம் தொடக்கம் 2023 நவம்பர் மாதம் முழுவதும், தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் இச்செயற்றிட்டத்தினூடாக பெற்றுக்கொண்ட அறிவு மற்றும் தெளிவினூடாக மேற்கூறிய தலைப்புக்கள் தொடர்பிலான அறிக்கையிடல்களை வெளியிட வேண்டும்.
குறித்த ஆறு ஊடகவியலாளர்களும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாகாணங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களாக இருக்கலாம் அல்லது இச்செயற்றிட்ட தேவைகள் மற்றும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களுக்கு அமைய வேறு மாகாணங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்க முடியும்.

தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தங்களது செய்திகளை தயாரிப்பதற்கான செலவுகளை ஈடு செய்யும் வண்ணம் மாதாந்த உதவித்தொகை ஒன்றினை பெற்றுக்கொள்வர். இச்செயற்றிட்டமானது அச்சு, இலத்திரனியல் மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களில் பணியாற்றும் பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.

இச்செயற்றிட்ட காலப்பகுதிக்குள், TISL நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றும் அனுபவமிக்க வழிகாட்டல் குழுவினால் தெரிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களும் வழி நடாத்தப்படுவார்கள்.

தகுதி மற்றும் தெரிவடிப்படைகள் தகுதிகள்: அடிப்படையில் ஓர் சிறந்த விண்ணப்பதாரி, 20 – 35 வயதுக்கு உட்பட்ட ஓர் இலங்கை குடிமகனாக இருத்தல் வேண்டும்,முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட சுயவிபரக்கோவை (CV) மற்றும் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளில் உங்களது ஆர்வம் மற்றும் மேலே குறிப்பிட்ட தலைப்புகள் தொடர்பிலான புரிதலை வெளிப்படுத்தும் வண்ணம் கடிதம் ஒன்றினை (Cover letter) சமர்பித்தல்

கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளை உறுதிப்படுத்தும் ஆவணங்களின் பிரதிகளை சமர்ப்பித்தல், அச்சு, இலத்திரனியல் அல்லது டிஜிட்டல் தளங்களில் பிரசுரமான அல்லது வெளியான தங்களது ஆக்கங்கள், பதிப்புக்கள் மூன்றினை சமர்ப்பித்தல்

– இச்செயற்றிட்டத்தில் பங்குபற்ற அனுமதியை உறுதிப்படுத்தும் பத்திரிகை ஆசிரியர்/ செய்தி பணிப்பாளரின் அனுமதிக் கடிதத்தினை சமர்ப்பித்தல் (சுயாதீன ஊடகவியலாளர்கள் ஓர் பத்திரிகை ஆசிரியர்/ செய்தி பணிப்பாளரிடமிருந்து பரிந்துரைக் கடிதமொன்றினை சமர்ப்பிக்க வேண்டும்), விண்ணப்பதாரி TISL நிறுவனத்தின் கடந்த கால செயற்றிட்டங்களில்/ புலமைப்பரிசில்களில் பங்குபற்றியவராக இருக்க கூடாது.

விண்ணப்பதாரி தனது ஆர்வத்தினை வெளிப்படுத்துவதற்கான விண்ணப்பத்தினை மின்னஞ்சல் ஊடாக “Regional Journalism Fellowship” என தலைப்பிட்டு tisl@tisrilanka.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி: 27 மார்ச் 2022.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 3

Back to top button
error: