crossorigin="anonymous">
உள்நாடுபொது

தமிழர் பண்டைய பாரம்பரிய முறையிலான திருமணம்

மாட்டு வண்டியில் மணமக்கள் ஆலயத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு திருமணம்

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் நேற்றைய தினம் (23) தமிழர்களின் பண்டைய பாரம்பரிய முறையிலான திருமண நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது நெற்கற்றைகளினால் வடிவமைக்கப்பட்ட மாட்டு வண்டியில் மணமகனும், மணமகளும் ஆலயத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு திருமணம் நிகழ்த்தி வைக்கப்பட்டுள்ளது.

திருமணம் இடம்பெற்ற வீடும் நெற்கற்றைகளினால் சோடனை செய்யப்பட்டிருந்ததுடன், நிகழ்வுகள் பாரம்பரியங்களை பேணியதாக நடைபெற்றுள்ளது.

தற்போதைய காலத்தில் தமிழர்களின் பண்டைய பாரம்பரியங்கள் மறக்கப்பட்டுவரும் நிலையில் மீண்டும் அவற்றினை எதிர்கால சந்ததிக்கு கொண்டுசெல்லும் வகையில் இந்த திருமணத்தை நடாத்தியதாக குறித்த திருமண வீட்டின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 4 =

Back to top button
error: