crossorigin="anonymous">
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸ் தலைவர் பதவியிலிருந்து எம்.எஸ். தோனி விலகினார்!

சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியிலிருந்து மஹேந்திரசிங்  தோனி விலக தீர்மானித்துள்ளார் என சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை சுப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம். எஸ். தோனி தலைவர் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளார்.

எனினும், இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும் தோனி சென்னை அணியில் தொடர்ந்து இடம் பெறுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜடேஜா 2012ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணியில் விளையாடி வருகிறார். சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 2008 ஆம் ஆண்டு முதல் 12 சீசன்களில் தோனி வழிநடத்தியள்ளார்.

இதில் 4 முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கிண்ணத்தை வென்றுள்ளது. இந்த 12 சீசன்களில் ஒரே ஒருமுறை மட்டுமே பிளே ஓஃப் சுற்றுக்கு சென்னை தகுதி பெறவில்லை.

ஒன்பது முறை இறுதிப்போட்டியை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டுள்ளது. நாற்பது வயதாகும் மஹேந்திர சிங் தோனி, கடந்த 2014 ஆம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

2017 ஆம் ஆண்டு  தலைவர் பதவியில் இருந்து விலகிய அவர் 2020 ஆம் ஆண்டு வரை ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐபிஎல் 2021 சீசன் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

அதுவே தோனி தலைவராக விளையாடிய இறுதிப் போட்டியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 2

Back to top button
error: