கொழும்பு நகருக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக வரும் வாகனங்களுக்காக நாளை (07) முதல் புதிய ஸ்டிக்கர்கள் அறிமுகப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக நாளை முதல் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டும் காலம் முழுவதும் இந்த ஸ்டிக்கர் செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறினார்.
கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்காக ஒருநாளுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் ஸ்டிக்கர் நடைமுறை தற்போது அமுலிலுள்ள நிலையில் நாளை முதல் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களின் தகவல்கள் பொலிசாரினால் பதிவு செய்யப்படவுள்ளன. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும் தாமதம் மற்றும் அசௌகரியங்களை குறைக்கும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்டிக்கர்களை ஒட்டும் நடைமுறை நாளை காலை முதல் முன்னெடுக்கப்படுவதினால் நாளை காலை வாகன நெரிசல் ஏற்படக்கூடும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்..
பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் வரை இந்த ஸ்டிக்கர்களுடன் வாகனங்கள் பயணிக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்