இலங்கையில் கர்ப்பிணி (Risk ) தாய்மார்களுக்கு கொவிட்19 தடுப்பூசி மருந்தேற்றல் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என்று பிரசவ விசேட வைத்தியர்கள் நிலையத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.
இலங்கை முழுவதிலும் தற்போது 2 லட்சத்து 76 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி காலை பிலியந்தல சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகத்திலும், கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையிலும் இடம்பெறும்.