crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் விரைவில் அறிவிப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் முழுமையான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டை கட்டாயமாக்கப்படவுள்ள பொது இடங்கள் தொடர்பான பட்டியல் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 14.4 மில்லியன் மக்கள் முதல் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.
எனினும் அவர்களில் 7.7 மில்லியன் மக்களே செயலூக்கி தடுப்பூசியை பெற்றுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த 2 வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது குறித்த தடுப்பூசி அட்டை கட்டாயமக்கப்படவுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அவ்வாறான பொது இடங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படும்.
இதன்படி, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் மாத்திரமே அவ்வாறான பொது இடங்களுக்கு அனுமதிக்கப்படுவர்.
20 வயதுக்கு மேற்பட்டோர் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால் மாத்திரமே அது முழுமையான தடுப்பூசியான கணக்கில் கொள்ளப்படும்.
16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டோர் முதல் இரண்டு தடுப்பூசிகளும் பெற்றிருந்தல் வேண்டும் என தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 3 =

Back to top button
error: