crossorigin="anonymous">
விளையாட்டு

முல்லை யுவதிக்கு இந்திய குத்துச்சண்டை போட்டியில் தங்க பதக்கம்

முல்லைதீவு மாவட்ட யுவதி யோகராசா நிதர்சனா இந்தியாவில் இடம்பெற்ற குத்துச் சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

INTERNATIONAL BRAVE BOXING COUNCIL நடாத்தும் சர்வதேச குத்துச் சண்டை போட்டி நேற்று (26) மாலை 5 மணிக்கு, மதுரவாயில் சென்னனயில் இலங்கை மற்றும் இந்திய அணியினர்களுக்கிடையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இப்போட்டியில் இலங்கை அணி வீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த
எஸ்.சிறீதர்சன் ரி.நாகராஜா ஆகியஇரண்டு வீரர்களும், முல்லைத்தீவை சேர்ந்த
இ.கிருஸ்ணவேணி, வை.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்.

ஆசிரியர் நந்தகுமார் அவர்களிடம் பயிற்சி பெற்ற குறித்த நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் மற்றும் ஒருவர் சில்வர் பதக்கத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியில் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யோகராசா நிதர்சனா என்ற தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் யுவதியும் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து நாட்டிற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 30 − = 20

Back to top button
error: