ரஷ்யா உக்ரைனை இரண்டு நாடாக பிரிக்க திட்டம்?
உக்ரைனை முழுமையாக கைப்பற்ற வாய்ப்பு இல்லாத நிலையில் ரஷ்ய அதிபர் புதின் புதிய வியூகம் வகுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியா, தென்கொரியா போன்று உக்ரைனை இரு துண்டாக பிரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஒரு மாதத்துக்கு மேலாகத் தொடர்கிறது. அதேநேரம் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைன் விவகாரம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
உக்ரைன் நாட்டை ரஷ்யா இரண்டு துண்டாக பிரிக்கலாம் என்று உக்ரைன் உளவுத்துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்து இருந்தது. உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியாததால் நாட்டை இரண்டு துண்டாக பிரிக்க ரஷ்ய அதிபர் திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் புடானோவ் தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தில் உள்ள வடகொரியா, தென்கொரியா போன்று உக்ரைனை இரு துண்டாக பிரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகவம் உக்ரைனின் முழுமையான பகுதிகளை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்த புதின் நாட்டை இரண்டாக பிரிக்க திட்டமிட்டுள்ளார் எனக் கூறினார்.(இந்து)