crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

தகுளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவன் மோகனதாஸ் வருணிதன் கௌரவிப்பு

தம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தி/குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவன் மோகனதாஸ் வருணிதன் இன்று (01) கௌரவிக்கப்பட்டார்.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் குறித்த மாணவனுக்கு பயனாளி நலன் காசோலையாக ரூபா 5000 வழங்கி வைக்கப்பட்டது. குறித்த காசோலையினை திருகோணமலை மறை மாவட்ட ஆயர் பேரட்திரு கலாநிதி நோயல் இமானுவேல் வழங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் “சுரக்கும்” திட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் முதற் தடவையாக முழுமையான தொகையை செலுத்திய அங்கத்தவராக இணைந்தவரை பாராட்டும் முகமாக தவணைப் பணம் செலுத்தும் புத்தகமும் பிரதேச செயலாளரால் இதன் போது வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

சமூக பாதுகாப்பு சபையில் அங்கத்துவம் கொண்ட மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப்பரிசில் சித்திக்கு ரூபா 5000 கொடுப்பனவும் க.பொ.த.சாதாரன தர சித்திக்கு ரூபா 10000 கொடுப்பனவும் பல்கலைக்கழக தெரிவுக்கு 20000 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமூக சேவை உத்தியோகத்தர் பி.சுதன், சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பாளர் பா.சஜீகா,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தங்கரூபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 67 − = 65

Back to top button
error: