crossorigin="anonymous">
உள்நாடுபொது

மிரிஹானையில் ஊடகவியலாளர்கள் கைது குறித்து முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

மிரிஹானையில் வியாழனன்று இரவு இடம்பெற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி திரட்டுவதற்குச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டது குறித்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் பலத்த கண்டனத்தைத் தெரிவிக்கின்றது.

இது தொடர்பாக முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தமது கடமையை நிறைவேற்றுவதற்குச் சென்ற ஊடகவியளாளர்கள் தாக்கப்பட்டது மட்டுமன்றி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊடகக் கடமையை நிறைவேற்றச் சென்ற ஊடகவியளாளர்கள் தமது அடையாள அட்டைகளைக் காண்பித்தும் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பாரபட்சமற்ற முறையில் விசாரணைகள் நடாத்தி, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாது இருப்பதை உறுதிப்படுத்துமாறும், குறிப்பாக ஊடகவியளா ர்கள் இவ்வாறான கட்டங்களில் தமது கடமைகளைச் செய்வதற்கு போதிய பாதுகாப்பினை வழங்குமாறும் பொலிஸ் மா அதிபரையும், ஊடக அமைச்சரையும் நாம் கேட்டுக் கொள்கின்றோம்.” எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − 15 =

Back to top button
error: