இலங்கையில் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை பல பிரதேசங்களில் தென்பட்டுள்ளதால் நாளைய தினம் (03) புனித நோன்பு ஆரம்பிக்கப்படு என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக கூட்டாக இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (02) மாலை மஃரிப் தொழுகையை அடுத்து, கூடிய பிறைக் குழு மாநாட்டில் இம்முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.