crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஊடகவியலாளர்கள் தாக்கப்படடமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம்

ஊடகவியலாளர்கள் தாக்கப்படடமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு ஊடக அமையத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு முன்பாக இன்றையதினம் (04) முன்னெடுக்கப்பட்டது.

தென்பகுதியை சேர்ந்த சகோதர சிங்கள ஊடகவியலாளர் பலர் கடந்த 31-03-2022 அன்று கொழும்பு மீரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன் நடாத்திய போராட்டம் தொடர்பில் அறிக்கையிடலுக்காக சென்ற வேளை பொலீசார் மற்றும் விசேடஅதிரடிப்படையினர் ,இராணுவத்தினரின் தாக்குதலில் காயமடைந்துள்ளதோடு நான்கு ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமைக்கும் எதிர்ப்பு தெரிவித்தே இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது .

ஊடகவியலாளர்கள் தாக்க்கப்படடமை குறித்து முல்லைத்தீவு ஊடக அமையம் இன்று ஊடக அறிக்கையொன்றையும் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 9 + 1 =

Back to top button
error: