இலங்கையில் மேற்கொள்ளப்படும் போராட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கையினால் சுற்றுலாத்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை நாட்டின் பொருளாதாரத்தை ஈட்டித்தரும் முக்கிய துறையாகும். இந்த வருடம் பத்து இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்துவருவது இலக்காக இருந்தாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலைமை, இதற்கு பாரிய இடையூறாக அமைவதாக பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.