நாட்டு மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வில் அதிகரித்து வரும் நெருக்கடிகள் தொடர்பில் அவசர சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யுமாறு இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, அந்த சங்கத்தினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
நாட்டிலுள்ள அரச மற்றும் தனியார் சுகாதார சேவை நிலையங்களில் அத்தியாவசிய மருந்துகளுக்கும் உபகரணங்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் குறித்த கடித்தில் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.
சாதாரண சத்திர சிகிச்சை போன்ற சேவைகளும் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சில நோய்களுக்கான சிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது எந்தவகையிலும் சிறந்த விடயமாக அமையாது எனவும் எதிர்வரும் சில நாட்களுக்குள் அல்லது வாரங்களுக்குள் அத்தியாவசிய மருந்து பொருட்களை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை மருத்து சங்கத்தினர் தமது கடிதத்தில் கோரியுள்ளனர்.
அவ்வாறு இடம்பெறாவிடின், அவசர சிகிச்சை நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.