இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடர்பில் சவுதி அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரைக்கு 10 இலட்சம் யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படவுள்ளதாக சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மக்காவுக்குப் பயணம் செய்யும் யாத்திரீகர்கள் 65 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், முழுமையான கொரோனா தடுப்பூசி பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் சவூதி அரேபியா குறிப்பிட்டுள்ளது.
ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சவூதி அரேபிய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனாவுக்கு முந்தைய காலப்பகுதியில் 2 தசம் 5 மில்லியன் யாத்திரீகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த வருடம் 60 ஆயிரம் உள்நாட்டு யாத்திரீகர்கள் மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.