crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பில் விவாக, பிறப்பு, இறப்பு மற்றும் முஸ்லிம் விவாக பதிவாளர்கள் நியமனம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட காலமாக வெற்றிடமாக காணப்பட்ட 07 பதிவாளர் பிரிவுகளிற்கான கிராமிய விவாக, பிறப்பு, இறப்பு மற்றும் முஸ்லிம் விவாக பதிவாளர்களுக்கான வெற்றிடங்களிற்கான பதிவாளர் நியமனங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (11) திங்கட்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிழக்கு மாகாண பிரதி பதிவாளர் நாயகம் வீ.திருவருளின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பதிவாளர்களுக்கான நியமனக் கடிதங்களை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கிவைத்திருந்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, ஏறாவூர், வவுணதீவு, களுவாஞ்சிகுடி மற்றும் காத்தான்குடி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிற்கான 07 பதிவாளர்களிற்கான நியமனங்களே இதன்போது வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜனி முகுந்தன், பிரதம கணக்காளர் திருமதி.இந்திராவதி மோகன், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன்,
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் உள்ளிட்ட பதிவாளர்கள், பதிவாளர்களின் உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 72 − 64 =

Back to top button
error: