crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைவு

கொழும்பு – காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்த இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர் ஆர்ப்பாட்ட கூட்டத்தில் உரையாற்றும்போது ,

“இந்த அரசாங்கம் இலங்கை காவல்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது. இந்த சீருடை அணிவதை விட சுரங்க தொழில் செய்து பிழைப்பு நடத்துவது கண்ணியம், மரியாதை என என் மனைவியிடம் கூறியுள்ளேன்.

நாளை என்னை வேலையிலிருந்து நீக்கப் போகிறார்கள். நான் உறுதியாக இருக்கிறேன். நான் சோகமாக இல்லை. நான் கோபமாக இருக்கிறேன். என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள் என்று கோபமாக இருக்கிறது. அறிவாளிகள் இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டும்”.

மேலும், பணியில் உள்ள அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் வீதிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 4

Back to top button
error: