crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்த பொலிஸ் சார்ஜெண்ட் பிணையில் விடுதலை

கருத்தைக் கூறுவது குற்றமல்ல அது ஒரு நபரின் அடிப்படை உரிமை - சட்டத்தரணி

கொழும்பு – காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் போராட்டத்தில் இலங்கை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துள்ளார் இதனையடுத்து அவர் கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, பொலிஸ் சார்ஜெண்ட் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் சார்ஜெண்ட் இன்று (15) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரை பணியில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அவர் சார்பில் 12 பேர் கொண்ட சட்டத்தரணிகள் குழுவொன்று இலவசமாக நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்

ஒருவர் தனது கருத்தைக் கூறுவது குற்றமல்ல என்றும், அது ஒரு நபரின் அடிப்படை உரிமை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக, பொலிஸ் சார்ஜென்ட் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் சார்ஜென்ட், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 89 − 80 =

Back to top button
error: