சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் (United States Agency for International Development – USAID) இலங்கைக்கான பணிப்பாளர் திரு. ரீட் ஜே. அஸ்ச்லிமேன் (Mr. Reed J . Aeschliman) நேற்று (07) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார்.
கோவிட் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த இலங்கை மக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கான பங்களிப்பாக, அண்மையில் அமெரிக்க மக்கள் வழங்கிய 120 கோடி ரூபாய்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்காக இதன்போது ஜனாதிபதி நன்றியை தெரிவித்தார்
சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனம் (USAID) இலங்கைகையில் தொடர்ந்தும் திறம்பட இயங்குவதற்கு அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பையும் ஜனாதிபதி உறுதிப்படுத்தினார்