crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரசியலமைப்பை திருத்த பிரதமரிடமிருந்து முன்மொழிவு!

அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிவொன்றை அமைச்சரவைக்கு முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு, அது தொடர்பில் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார்.

அதற்கமைய, நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்றே நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தமொன்றுக்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச அரசியலமைப்பு திருத்தத்தினூடாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியுமென பிரதமர் எதிர்பார்த்துள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 33 = 38

Back to top button
error: