இலங்கையில் எரிபொருள் விலை மற்றும் செலவினங்கள் அதிகரிப்பு காரணமாக ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்க நேரும் எனவும் அதற்கிணங்க அனைத்து பஸ் கட்டணங்களும் 50 வீதத்தால் அதிகரிக்க நேரும் என்றும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்படும் வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தின்போது கட்டணங்களை இவ்வாறு அதிகரிக்க நேரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பஸ் உரிமையாளர் சங்கம் தற்போதைக்கு பஸ் கட்டணத்தில் திருத்தமொன்றை எதிர்பார்க்கவில்லையென்றும் எனினும் ஜூலை மாதத்தில் இடம்பெறும் வருடாந்த கட்டண திருத்தத்தின்போது விலை அதிகரிப்பை மேற்கொள்ள நேரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்