உள்நாடுபிராந்தியம்
2022 அரச பாடசாலைகளில் தரம் ஒன்று மாணவர் உள்வாங்கும் நடவடிக்கை ஆரம்பம்

இலங்கை முழுவதும் 2022ம் ஆண்டுக்காக அரச பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கை நேற்று (19) முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் பரவலாக நடைபெற்றன.
அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களிற்குட்பட்ட பாடசாலைகளில் நேற்று முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இம்முறை முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 1,254 மாணவர்களும் மற்றும் துணுக்காய் கல்வி வலயத்தில் 550 மாணவர்களும் முதலாம் தரத்திற்கான அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.