இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் செயலாளர் நாயகம் ஒருவரான பி.எஸ்.பி. தித்தவெல்ல காலமானார்.
அவர் 1994 முதல் 1999 வரை பாராளுமன்ற செயலாளர் நாயகமாக பணியாற்றினார். அன்னாரின் பூதவுடல் கண்டி, இல. 26/1, ஹேவாஹெட்ட வீதி, பூவெலிக்கடை எனும் முகவரியில் வைக்கப்பட்டுள்ளது.
இறுதிக்கிரியைகள் நாளை (25) திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு கண்டி மகியாவ மயானத்தில் இடம்பெற்றும்.