உள்நாடுபிராந்தியம்
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதி விழா

மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரதி விழா இன்றைய தினம் (23) சனிக்கிழமை மன்னார் நகரசபை மண்டபத்தில் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தமிழ் தாய் வாழ்த்து,நடனம்,கவியரங்கம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் திருமதி ராஜ மல்லிகை சிவசுந்தர சர்மா, வவுனியா தமிழ் சங்கத்தின் ஸ்தாபகர் தமிழருவி த.சிவ குமாரன் உட்பட சர்வ மத தலைவர்கள் அழைக்கப்பட்ட பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.