crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தவிர்க்க உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு நிராகரிப்பு

கொழும்பு – காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை தாங்கும் 16 பேரின் பெயர் விபரங்களை முன்வைத்து, காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனும் பொலிஸாரின் மனு வேண்டுகோளை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

பொலிஸார் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை தாங்கும் 16 பேரின் பெயர் விபரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் காலிமுகத்திடலில் கூடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களிற்கும் ஆர்ப்பாட்டங்களை எதிர்ப்பவர்களிற்கும இடையில் மோதல்கள் இடம்பெறலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

வன்முறைகள் இடம்பெறுவதற்கு முன்னர் அல்லது பொது குழப்பம் இடம்பெறுவதற்கு முன்னர் உத்தரவினை பிறப்பிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். எனினும் வன்முறைகள் நிகழ்ந்தால் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என நீதிபதி தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 53 − 51 =

Back to top button
error: