crossorigin="anonymous">
உள்நாடுபொது

“கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் வெளியேற்றப்பட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் பிரதேச சபை உறுப்பினர்கள்

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி றஹீம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதினால் அவரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், இது தொடர்பில் கட்சியின் உயர்பீடம் துரிதமாக செயற்படாதவிடத்து, தாங்கள் வகிக்கும் பிரதேச சபையின் பதவிகளை இராஜினாமா செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளனர்.

மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட கட்சியின் உயர்பீடத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு, கட்சியின் நகர அமைப்பாளர் எம்.எச்.முஹம்மத் தலைமையில், இன்று (25) புத்தளத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட புத்தளம், கல்பிட்டி, வண்ணாத்தவில்லு பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் கூட்டாக இந்த வேண்டுகோளினை முன்வைத்தனர்.

கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான முஹம்மத் ஆசிக், பைசல் மரைக்கார், புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் றிபாஸ் நசீர், வண்ணாத்தவில்லு பிரதேச சபை உறுப்பினர் எம்.அனஸ்தீன் மற்றும் புத்தளம் வட்டாரங்களின் அமைப்பாளர்களும் இந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 9 = 1

Back to top button
error: