அரசாங்கத்திடம் இருந்து இந்த வாரம் உரிய பதில் கிடைக்காவிட்டால், அனைத்து அரச, தனியார், விவசாயம், தொழிலாளர் துறைகள் உள்ளிட்ட அனைவரும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்.தெரிவித்தார்
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அவலநிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆசிரியர் ‘அதிபர்கள்’ தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று (25) கல்வி அமைச்சின் செயலாளரை சந்தித்திருந்தது.
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், எதிர்வரும் 28ஆம் திகதியும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.