யாழ் மாவட்டச் செயலகத்தில் புவி தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் புவி தினம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது ” நிலையான வாழ்வியலுக்கு பொருத்தமான முதலீட்டை செய்வதில் விழிப்படையச் செய்தல்” எனும் நோக்கத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (25) மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் இலங்கையில் வாழ்வியலுக்கான மூலதனங்களில் முதலீடு நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? அல்லது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களினால் கருத்தாடல் மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், பிரதம கணக்காளர் திரு. சிவரூபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என் கமலராஜன், விரிவுரையாளர் திரு.எஸ்.ரவி ( புவியியற்துறை, யாழ்.பல்கலைக்கழகம்) மற்றும் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், மாவட்டச் செயலக உள்ளகக் கணக்காய்வாளர், கணக்காளர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.