ஐக்கிய மக்கள் சக்தி நேற்று (26) கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பித்துள்ள மக்கள் பேரணித் தொடர் இன்று (27) இரண்டாம் நாளாக மக்கள் பேரணி தொடர் மாவனெல்லை நகரிலிருந்து கொழும்பு நோக்கி ஆரம்பிக்கின்றது
நேற்றைய தினம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.
இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு வழங்கும் விதமாக, ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, இந்தப் மக்கள் பேரணித் தொடர் முன்னெடுக்கப்படுகிறது.
மக்கள் பேரணித் தொடர் மே தினத்தன்று, கொழும்பை வந்தடைய உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.