இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா ஒவ்வொரு ஆண்டும் ரமழான் மாத நோன்பு நோற்று வருகின்றார்.
கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கடந்த ஆண்டு அளித்த பேட்டியில், ஒவ்வொரு ஆண்டும் தனது இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து ரமழானுக்காக சில நாட்கள் நோன்பு நோற்பதாகக் கூறினார்.
மூத்த வைத்தியர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வாவும் இந்த வருடம் சனத்துடன் இணைந்து நோன்பு நோற்றுள்ளார்.
சனத் ஜயசூரிய, ஆரம்ப காலத்தில் கிரிக்கட் பயிற்சிக்காக மாத்தறையில் இருந்து கொழும்பு வந்த ஆரம்ப காலத்தில் வருமானப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டவர். அப்போது அவர் தெஹிவளையில் தாயும் இளம் மகளும் மட்டுமே இருந்த முஸ்லிம் வீடொன்றில் தான் தங்கியிருந்து பயிற்சிகளுக்கு சென்றுள்ளார்.
அந்த வீட்டில் தன்னை சொந்தப் பிள்ளை போன்று நடத்தியதாகவும், வீட்டின் அனைத்து இடங்களிலும் சுதந்திரமாக நடமாடும் உரிமை தனக்கு இருந்ததுடன் தனது உடம்புக்குத் தேவையான போஷாக்கான உணவு மற்றும் பால், பானங்களை அளிப்பதிலும் அவர்கள் கரிசனை கொண்டிருந்ததாக சனத் ஜயசூரிய ஒரு தடவை தெரிவித்திருந்தார்.அன்று அவர்களுடன் சேர்ந்து நோன்பு நோற்ற சனத் ஜயசூரியவின் பழக்கம் இன்று வரை தொடர்கின்றது