crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் அரசாங்கத்திலிருந்து விலகிய கட்சிகள் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படுகின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று இன்று (29) இடம்பெறவுள்ளது.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் தீர்மானம் மிக்க கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், அரசாங்கத்தில் இருந்து சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த 11 கட்சிகள் நேற்று பிற்பகல் ஒன்றுகூடியிருந்தன.

ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு 11 கட்சிகள் அணி தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 2 =

Back to top button
error: