crossorigin="anonymous">
உள்நாடுபொது

பஸ் வண்டி – முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதி விபத்து, மூவர் மரணம்

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியில் மன்னம்பிட்டி பாலத்திற்கு அருகில் இன்று (01) தனியார் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

.விபத்துக்குள்ளான பஸ் வண்டி பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பில் உள்ள அரசாங்க அலுவலகத்திற்கு அரசாங்க ஊழியர்களை ஏற்றிச் சென்றுள்ளதுடன் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி பொலன்னறுவை அரலகங்வில அருணபுர பகுதியில் இருந்து மாத்தளையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொலன்னறுவை – அரலகங்வில, அருணபுர பகுதியைச் சேர்ந்த 63 வயதான யு. டபிள்யூ.டபிள்யூ. ஜி. ரன்பண்டா, 62 வயதான அவரது மனைவி பி. கே. நந்தாவதி, முச்சக்க ரவண்டியில் பயணித்த அவர்களது உறவினரான பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த 75 வயதான டி. ஜி. விமலா ரந்தெனிய எனும் பெண் ஆகியோரே மரணமடைந்துள்ளதாக மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 65 − 59 =

Back to top button
error: