மட்டக்களப்பில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை, ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்பு
இலங்கை வாழ் இஸ்லாமியர்களான முஸ்லீம் பிரஜைகள் இன்றைய தினம் (03) செவ்வாய் கிழமை புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.
இஸ்லாம் மார்க்கத்தின் ஐம்பெருங் கடமைகளில் நான்காவது கடமையான நோன்பை, ரமழான் மாதம் முழுவதும் நோற்ற பின்னர் ஈதுல் பித்ர் பெருநாள் எனும் நோன்பு பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
நோன்பு பெருநாளை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை விசேட பெருநாள் தொழுகை மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றது .
மட்டக்களப்பு மாவட்ட காத்தான்குடி, ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் போன்ற பகுதிகளில் விசேட நோன்பு பெருநாள் திடல் தொழுகைகள் ஆயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் மூன்று வருடங்களின் பின்னர் இன்று (03) காலை இடம்பெற்றிருந்தது.
இஸ்லாமிக் சென்டரின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரை முன்றலில் விசேட பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றது.
அஷ்ஷெய்க். எம்.சீ.எம்.ரிஸ்வான் (மதனி) அவர்களினால் தொழுகை நடாத்தப்பட்டதுடன், அதன்பின்னரான விஷேட குத்பா பிரசங்கமும் இடம்பெற்றிருந்தது.