சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டி இடமாற்றம்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப் போட்டி இடமாற்றம் செய்யப்பட்டு போர்ச்சுகல்லில் நடக்கவுள்ளது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்தை சேர்ந்த மான்செஸ்டர் சிட்டி-செல்சி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
இறுதிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இங்கிலாந்து அரசு, கொரோனா அதிகரிப்பு காரணமாக துருக்கியை சிவப்பு பட்டியலில் வைத்துள்ளது.
எனவே துருக்கி நாட்டுக்கு பயணம் செய்ய இங்கிலாந்து நாட்டினருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியை நேரில் காண இங்கிலாந்து ரசிகர்கள் இஸ்தான்புல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து இறுதிப் போட்டியை இங்கிலாந்தில் நடத்தலாம் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியை இஸ்தான்புல் நகரில் இருந்து போர்ச்சுகல் நாட்டில் உள்ள போர்டோ நகருக்கு மாற்றப்படுவதாக ஐரோப்பிய கால்பந்து சங்கம் நேற்று அறிவித்துள்ளது.