சைகைமொழி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ILO நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் சைகைமொழி தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் செல்வி. செ.அகல்யா அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (05) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் சைகைமொழி தொடர்பான குறைபாடுகள் மற்றும் சவால்கள், நன்மைகள் தொடர்பாகவும், சைகைமொழிக் கல்வியில் தேசிய ரீதியில் காணப்படும் மாற்றங்கள், வளப்படுத்த வேண்டிய தேவைகள் தொடர்பாகவும் கூறினார்.
இச் செயலமர்வில் வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் செ.அகல்யா, வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் த.தனுஜா விசேட கல்வி அலகின் உதவிக் கல்விப் பணிப்பாளர் விஷ்ணுகரன் மற்றும் குழுவினர், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , முதியோா் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.