crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

யாழில் தொழிலுக்கான வழிகாட்டல் செயலமர்வு

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் YOULEAD நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பின் அனுசரனையுடன் தொழிலுக்கான வழிகாட்டல் செயலமர்வு யாழ்.மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் திரு.தி.விஸ்வரூபன் அவர்களின் தலைமையில் நேற்று (05) யாழ் மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

2021/2022 அரச துறையில் நியமனம் பெற்று சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தொழில் வழிகாட்டல் செயலமர்வானது மனிதவலு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பங்குபற்றலுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமை விடயப்பகிர்வு வழங்குவதற்கு ஏதுவாக இச் செயலமர்வானது இரு அமர்வுகளாக இடம் பெற்றன. முதல் அமர்வில் 68 உத்தியோகத்தர்களும், இரண்டாம் அமர்வில் 46 உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன், சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் திரு. ஆ.ரகுநாதன், YOULEAD நிறுவன மாவட்ட இணைப்பாளர் எஸ்.அரவிந்தன், மனிதவலு மேம்பாட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகளான திரு.க.கருணாகரன் மற்றும் திரு.பி.சிறீபவன், சமுர்த்தி திணைக்கள முகாமையாளர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 2 =

Back to top button
error: