crossorigin="anonymous">
உள்நாடுபொது

சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு

இலங்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க பாராளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் குழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்

பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க பாராளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இன்று (07) அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தின் 10 அங்கம் வகிக்கும் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்படும் குழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + 4 =

Back to top button
error: