crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பொது மயானங்களை தூய்மைபடுத்தும் பணி

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பொது மயானங்களின் தூய்மையைப் பாதுகாக்கும் நோக்கில் அவற்றைத் துப்பரவு செய்து சேகரிக்கப்பட்ட கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் பணிகள் இன்று (08) நடைபெற்றன.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவனின் தலைமையில் பிரதி முதல்வர் க.சத்தியசீலனின் வேண்டுகோழிற்கிணங்க சின்ன உறணி பொது மயானமும் முதல்வரின் ஆலோசனைக்கமைய கல்லடி உப்போடை இந்து மயானமும் பாரிய வாகனங்கள் சகிதம் துப்பரவு செய்யப்பட்டன.

சின்ன ஊறணி பொது மயானத்தை மாநகர சுகாதாரத் தொழிலாளர்கள், சின்ன ஊறணி கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கயல்வெளி இளைஞர் கழகத்தினர் மற்றும் சண்றைஸ் விளையாட்டுக் கழக அங்கத்தினர்கள் கலந்து கொண்டு துப்பரவுப் பணியில் ஈடுபட்டனர்.

இதேவேளை கல்லடி உப்போடை இந்து மயானத்தை கல்லடி பேச்சியம்மன் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சமூக ஒன்றியங்களின் அங்கத்தினர்கள் இணைந்து கழிவுகளை முகாமைத்துவம் செய்தனர்.

மாநகர சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் க.ரகுநாதன், மாநகரசபை உறுப்பினர்களான சிவம் பாக்கியநாதன், த.இராஜேந்திரன் மற்றும் எஸ்.மேகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு துப்பரவுப் பணியில் ஈடுபட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 6 = 1

Back to top button
error: