இலங்கையில் இன்று (09) இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்முறையை வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் எந்தவொரு நபரையும் தாக்கவோ அல்லது துன்புறுத்தவோ அல்லது எந்தவொரு சொத்துக்கும் சேதம் விளைவிக்கவோ கூடாது என்றும் பொதுமக்களிடம் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் வேண்டுகோள் விடுத்தார்.
பொது மக்களை அமைதியாக இருக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்