crossorigin="anonymous">
உள்நாடுபொது

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் புதிய பிரதமர்? தொடர்பில் தீர்மானம்

ஜனாதிபதி தலைமையில் இன்று (10) இடம்பெறும் சர்வகட்சித் தலைவர்களுடனான கூட்டத்தின்போது புதிய இலக்கை பிரதமர் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் என சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியை நேற்றைய தினம் சந்தித்த சர்வமதத் தலைவர்களிடம் ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கட்சி சார்பற்ற ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கான தீர்மானமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலக்கை பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகியமை தொடர்பான அதி விசேடஅரச வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கை முழுவதும் நேற்று (09) இரவு 7.00 மணி முதல் நாளை (10) காலை 7.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம், பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு இணங்க 2022.05.11 புதன்கிழமை காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 2 =

Back to top button
error: