crossorigin="anonymous">
உள்நாடுபொது

பதவி விலகிய மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையிலிருந்து வெளியேறினார்

பதவி விலகிய இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (10) சற்று முன்னர் கொழும்பு கொள்ளுபிட்டிய அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

மஹிந்த ராஜபக்ஷ தனது பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்திருந்தார் என்பதுடன், ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தினால் இலக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய அதி விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று (10) இடம்பெறும் சர்வகட்சித் தலைவர்களுடனான கூட்டத்தின்போது புதிய இலக்கை பிரதமர் பதவி குறித்து தீர்மானிக்கப்படும் என ஜனாதிபதியை நேற்றைய தினம் சந்தித்த சர்வமதத் தலைவர்களிடம் ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளதாக சர்வமதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 19 − 10 =

Back to top button
error: