இலங்கை முழுவதும் அவசரகாலச் சட்டம் நடைமுறையிலுள்ள நிலையில் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் அமைதியான சூழ்நிலையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அனைத்து மக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என கலால் வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.