crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

ரூ.5000 கொடுப்பனவு பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்

அம்பாறை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்காக தற்போது வழங்கப்பட்டுவரும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பட்டியலில் உள்ளடக்கப்படாதவர்கள் மேன்முறையீடு செய்யலாமென, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளருமான வி.ஜெகதீசன் (09) தெரிவித்துள்ளார்.

வருமானம் குறைந்த குடும்பங்கள் கிராம உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு இதற்கான கொடுப்பனவு பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னர் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவிற்கான மேன்முறையீடு செய்ய முடியும்.

மேன்முறையீடு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை உரிய முறையில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் ஒப்படைக்களாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனை மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கமைய 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு முதல் கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு பிரதேச செயலகங்கள் ரீதியாக கிரமமான முறையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இரண்டாம் கட்டமாக இக்கொடுப்பனவு சமுர்த்தி பெறுவதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்ளோர் மற்றும் நாளாந்த வருமானத்தை இழந்த குடும்பங்கள், சமுர்த்தி நிவாரணம் பெறாத ஆனால் சமுர்த்தி நிவாரணம் பெறத்தகுதியான குடும்பங்கள், தொழிலிழந்தோர், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அத்துடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் வருமானத்தை இழந்த குடும்பங்கள், முதியோர்கள், நாட்பட்ட நோயாளிகள் உள்ளிட்ட சுமார் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இக்கொடுப்பனவும் பிரதேச செயலாளர்களின் மேற்பார்வையில் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்திற்கு முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்காக 83 ஆயிரத்தி 666 குடும்பங்களுக்காக 418.33 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, பணிப்பாளர் வி.ஜெகதீசன் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 32 − = 26

Back to top button
error: