இரத்து செய்யப்பட்டுள்ளாக அறிவிக்கப்பட்ட இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்தவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கான விசேட கூட்டம் இன்று (11) பி.ப. 3.00 மணிக்கு இணையவழி (Zoom) ஊடாக நடைபெறவுள்ளதாக இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் இன்று (11) தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் என இலங்கை பாராளுமன்றன் சபாநாயகர் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் பலவேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை பாராளுமன்ற கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இன்று நடத்தப்படவுள்ளது
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு நேற்று இக்கூட்டம் இரத்து செய்யப்பட்டிருந்தது
கட்சித் தலைவர்களின் கூட்டத்தை இணையவழி ஊடாக நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.