இலங்கையில் பதவி விலகிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இன்று (11) பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன இதனை தெரிவித்தார்.
இலங்கையில் தற்போதுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பின்னர், தாம் விரும்பும் இடத்திற்கு அவர் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார் எனவும் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். கமல் குணரத்ன மேலும் தெரிவித்தார்.